இன எழுச்சி அரசியல் மாநாட்டிற்கு வாழ்த்துகள் ! – உலகத் தமிழ் அமைப்பு

இன எழுச்சி அரசியல் மாநாட்டிற்குவாழ்த்துகள் !

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மே 24 – ஆம் நாள் திருச்சியில் நடைபெறவுள்ள இன எழுச்சி அரசியல் மாநாட்டிற்கு உலகத் தமிழ் அமைப்பின் சார்பில் வாழ்த்துகள்!

தமிழினப் படுகொலை நடந்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன.  நடைபெற உள்ள இந்த ‘இன எழுச்சி அரசியல் மாநாடு’  தமிழீழத்தில் நடந்த தமிழினப் படுகொலையை நினைவுகூர்வதோடு தமிழின உணர்வு – எழுச்சி – விடுதலை குறித்தும், இறையாண்மையுடைய தற்சார்பான தமிழர் நாடு அமையவும் பாடுபட உறுதியேற்கும் நாளாய் அமையவும் வாழ்த்துகிறோம்.

இன எழுச்சி மாநாடு

தமிழரின் அரசியலையும் பண்பாட்டையும் மீட்கவும்; தமிழர் எனும் ஓர் புள்ளியில் அனைவரும் இணையவும்; தமிழ் மொழிக் கல்வியை உறுதிப்படுத்தவும்; சாதி, சமயம் அற்ற, குடிப்பழக்கம் இல்லாத, இயற்கை வளம்  – மனித உழைப்புச் சுரண்டலற்ற தமிழ்நாட்டை உருவாக்கவும்; மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்விடுதலை போன்ற முற்போக்கான சிந்தனைகள் தழைக்கும் குமுகத்தைக் கட்டியெழுப்பவும் உறுதியேற்க வாழ்த்துகிறோம்.

நாம் தமிழர் கட்சியின் உயரிய நோக்கங்கள் அனைத்தும் நிறைவேற உலகத் தமிழ் அமைப்பின் சார்பாக வாழ்த்துகிறோம்.

அன்புடன்,

முனைவர் வை. க. தேவ், தலைவர், உலகத் தமிழ் அமைப்பு

23-மே-2015, அமெரிக்கா