‘நீட்’ தேர்வு எதிர்ப்பு – ஊடகச் சந்திப்பிற்கு உலகத் தமிழ் அமைப்பு அழைப்பு !

வணக்கம்! ‘நீட்’ நுழைவுத் தேர்வு தமிழ் நாட்டுக்குப் பல்வேறு வகைகளிலும் மாபெரும் தீங்கு விளைவிக்கும் என்பதைக் கற்றறிந்த அறிஞர்கள் பலரும் தெளிவாக விளக்கியுள்ளனர். தமிழ் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் ‘நீட்’டை எதிர்க்கின்றனர். நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்களை மேற்படிப்புக்குத் தேர்ந்தெடுக்கும் முறையைத் தமிழ் நாட்டு மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஒருமனதாக நிராகரித்துள்ளனர். நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ் நாட்டுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்.

அனைத்துக்கட்சி அழைப்பு - நீட் தேர்வு எதிர்ப்பு

தமிழ் நாட்டு அரசும், தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்திய ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இதைத் தடுக்க வேண்டும். நீட் தேர்வை தடுக்கத்தவறினால் வருங்கால தமிழர் தலைமுறைகளின் தீராப்பழிச்சொல்லுக்கு ஆளாவோம். ஆகவே, காலம் தாழ்த்தாது நாம் அனைவரும் ஒன்றிணைந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழ் நாட்டை இப் பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

 

தமிழர்களின் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை விளக்குவதற்காக உலகத் தமிழ் அமைப்பின் சார்பாக சென்னை ஊடகவியலாளர் மன்றத்தில்

திரு. அரி பரந்தாமன் (முன்னாள் நீதியரசர்)

திரு. ஆழி செந்தில்நாதன் (தன்னாட்சித் தமிழகம்)

ஆகியோர் ஒருங்கிணைப்பில் ஊடகச் சந்திப்பு நவம்பர் 09 ஆம் நாள், காலை 11 மணியளவில் நடைபெறும். அனைத்து ஊடகங்களையும் அழைக்கின்றோம். நீட் தேர்வுக்கு எதிரான ஆவணம் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும்.

 

நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடுடைய அனைத்து அரசியல் கட்சிகளையும், இயக்கங்களையும் இவ்வூடகச் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். தன்முனைப்பின்றி அனைவரும் ஒன்றிணைந்து தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்க தாங்களோ, தங்களின் பேராளரோ தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 

                 கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது

                 தூக்கங் கடிந்து செயல்.

 

அன்புடன்,

முனைவர் வை. க. தேவ்

தலைவர், உலகத் தமிழ் அமைப்பு