அனைத்துலக அரசுகள் தற்போதய சூழிலில் தழிழீழத்தனியரசினை ஈழத் தமிழர் தேசத்தின் தேசியச்சிக்கலுக்குத் தீர்வாக ஏற்றுக் கொள்ளாவிடினும் இந் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என நாம் உறுதியாக நம்புகிறோம். சிங்களத்தின் சமரசம் காணமுடியாத அமைப்புசார் சிக்கல்களும், புவிசார் நலன்கள் தொடர்பாக ஏற்படப்போகும் சமன்பாட்டு மாற்றங்களும் இந்நிலையைத் தோற்றுவிக்கும என்பது எமது நம்பிக்கை. எழும் வாய்புக்களை துல்லியமாகக் கணிப்பிட்டுச் செயற்படும் வகையிலான – மென்வலுவினை முதிர்ச்சியான முறையில் பயன்படுத்தும் ஒரு வலுமையமாக நாம் செயற்படுவோம்.
இவ்வாறு முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தி மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையமைச்சர் வி. உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாயக்காலில் நமது மக்கள் பட்ட துயர் வாரத்தைகளால் வர்ணிக்க முடியாதது. நமது மக்களுக்கு கிடைக்கும் நீதி என்பது நம்மை நாமே ஆளும் தனியரசின் ஊடாகத்தான் எட்டப்பட முடியும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்; நமது போராளிகள் புரிந்த ஈகம் ஆத்ம சக்தி கொண்டது. நீதியின் அடிப்படையில் தர்மத்தின் அடிப்படையில் நாம் தொடரந்தும் முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்றொ ஒரு நாள் வெற்றியினைப் பெற்றே தீரும். அந்த நாள் வரை நமது விடுதலைக்காக உறுதியுடன் தொடரந்து உழைப்போம் என முள்ளிவாயக்காலிலிலும் தமிழீழ விடுதலைப்போராட்டத்திலும் தமது உயிர்களை ஈந்தவர்கள் மீது நாம் உறுதி எடுத்துக் கொள்வோம் எனவும் அவர் தனதுரையில் இடித்துரைத்துள்ளார்.
தலைமையமைச்சர் வி. உருத்திரகுமாரன் அவர்களின் தமிழீழத் தேசிய துக்க நாள் உரையின் முழுவடிவம் :
தமிழீழத் தேசிய துக்கநாள்!
மூன்று ஆண்டுகளின் முன் முள்ளிவாய்க்காலில் சிங்களம் மேற்கொண்ட தமிழினப்படுகொலையினை நாம் மனதில் இருத்தி நமது மக்கள் பட்ட துயர்களை நமக்குள் நாமே பகிர்ந்து கொள்ளும் நாள்.
இன்றைய நாள் நாம் நமது தேசத்தின் துயரைப்பகிர்ந்து கொள்ளும் நாளேயன்றி துயரத்தால் துவண்டு விடும் நாள் அல்ல.
மாறாக சிங்களம் நமது மக்களுக்கு இழைத்த கொடுமைகளை நமக்குள் கனலவிட்டு நமக்குள் நாமே தீயை மூட்டிக் கொள்ளும் நாள்.
தமிழீழ மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரத் தமிழீழ அரசு அமைப்பதனை விட வேறுவழியேதுமில்லை என்பதனை நமது மக்களின் இரத்ததையே சாட்சியமாக்கி நமக்கு உறுதியாக அறிவித்த நாள்.
சிங்களத்துடன் கூடிவாழ்தல் என்பது சாத்தியமாகப் போவதில்லை என்பதனை மட்டுமல்ல அது மிக அசிங்கமானதும் அவமானத்தக்குரியதும்; என்பதனையும் நமக்கு தீர்மானமாக அறிவித்த நாள்.
ஈழத் தமிழர் தேசம் தனது தன்நிர்ணய உரிமையின் அடிப்படையில், ஈழத்தமிழர் தேசம் தனது தற்பாதுகாப்பு உரிமையின் அடிப்படையில் சிங்களத்தின் இனஅழிப்பில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் தேவையின் அடிப்படையில், தனது இறைமையினை பிரயோதித்து தனக்கெனச் சுதந்தரமான தமிழீழத் தனியரசினை அமைத்துக்கொள்ளும் போராட்டத்தினை உறுதியுடன் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதனை நமக்கு ஆழமாக உணர்த்தி நிற்கும் நாள்.
எதிரிகளால், ஒடுக்குமுறையாளர்களால், ஆக்கிரமிப்பாளர்களால் உலகில் மக்களும் தேசங்களும் வலிகளையும் துயர்களையும் அவலங்களையும் சுமந்தமையினை உலக வரலாறு நிறையவே பதிவு செய்திருக்கிறது.
இத் துயர் நிறைந்த பக்கங்களில் ஈழத் தமிழ் தேசத்தின் வாழ்வும் பதிவாகிப் போயிருக்கிறது. இத்தயை துயர்களும் வலிகளும் ஒரு தேசத்தினை பலவீனப்படு;த்தி விடுபவை அல்ல. மாறாக எத்தகைய ஒடுக்குமுறைகளையும் தாண்டி விடுதலையினை வென்றெடுக்க வேண்டும் என்ற உறுதியனையும் மனவலிமையினையும் தரக்கூடியவை.
மக்களும் தேசங்களும் மகிழ்வின் போது ஒன்றிணையும் கணங்களைவவிடத் துயரின்போது ஒன்றிணையும் கணங்கள் மிகவும் கனதியானவை. ஆழமானவை. வரலாற்றுக் கூட்டுநினைவாக மகிழ்வின் கணங்கள் இருப்பதனைவிட துயரின் கனலே கூடுதலாக இருப்பதுண்டு.
முள்ளிவாயக்கால் பெருந்துயரும் தமிழீழ மக்களைப் பொறுத்தவரை பெரும் வரலாற்றுத் துயர். பெரும் வரலாற்றுக் கூட்டுநினைவு. தலைமுறை தலைமுiயாக- ஈழத் தமிழர் தேசம் மட்டுமல்ல உலகத் தமிழ் மக்கள் அனைவரும் பேணிப்பாதுகாக்க வேண்டிய வரலாற்றுப்பெரும் நெருப்பு.
ஈழத் தமிழ் மக்கள் மீது சிங்களம் புரிந்ததுபோல உலகில் வாழும் தமிழ் மக்கள் எவரின் மீதும் இத்தகைய ஒரு பெரும்படுகொலை நவீன கால வரலாற்றில் இடம்பெறவில்லை.
கூப்பிடு தொலைவில் தமிழகத்தில் இருந்த நமது 7 கோடிக்கும் மேற்பட்ட உறவுகளின் பாதுகாப்புவலையினையும் தாண்டி, உலகெல்லாம் பரந்திருந்து ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் புலத்து உறவுகளின் கண்காணிப்பினையும் கடந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் மக்களை சிங்களம் குறுகிய காலத்தில் படுகொலை செய்திருக்கிறது.
அரசுகளின் ஆளமையினையும் உலக நாடுகளின் எல்லைகளையும் கடந்து ஒரு தடவை சிந்தித்துப்பார்த்தால் 2 கோடி மக்கள் பலத்தைக் கொண்ட சிங்களத்தால் 7 கோடி தமிழக மக்கள் பலத்தைத் தாண்டி ஈழத் தமிழ் மக்களை இத்தகையதொரு பெரும்தொகையில் கொன்றொழிப்பது சாத்தியப்பட்டிருக்க முடியாது.
உலகில் மக்களை விட அரசுகள் தீர்மானகரமான சக்தியாக இருக்கும் நிலைமையும் மக்களின் உயிர்களை விட அரசுகளின் நலன்களே பெரிதாகிப்போய்விட்ட உலக ஒழுங்கும் இணைந்து சிங்களத்துக்கு உறுதுணையாக நிற்க நமது மக்களுக்கு முள்ளிவாயக்காலில் பெரும் அநீதியும் கொடுமையும் இழைக்கப்பட்டது.
அரசுகளின் கொடுரங்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற பயன்படுத்தப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய ஐ.நா. போன்ற அனைத்துலக ஏற்பாடுகள் நமது மக்களை பாதுகாகக்கத் தவறின.
ஜக்கிநாடுகள் அவை உட்பட அனைத்துலக சமூகம் ஏதோ ஒருவகையில் சிங்களத்துக்குத் துணைபோனமையினையும் முள்ளிவாய்க்கால் நமக்கு நினைவுறுத்தி நிற்கிறது.
முள்ளிவாய்க்கால் நமது வரலாற்றில் பெரும் துயர்தரும் நினைவுகளைக் கொண்டதாக அமைந்தமையால் இந் நினைவுகளின் உச்சநாளான மே 18 ஆம் நாளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழத் தேசியத் துக்கநாளாகப் பிரகடனப்படுத்தியது.
தமிழீழ மக்களின் துயரைத் தலைமுறை தலமுறையாகச் சுமந்து செல்வதற்கு வழிசமைக்கும் வகையில் முள்ளிவாயக்காலை; நினைவேந்தல் வாரத்தையும் பிரகடனப்படுத்தி இவ் வாரத்தில் முள்ளிவாயக்கால் நினைவுகளைத் தமிழ் மக்கள் மத்திதியலும் அனைததலகச சமூகத்தின் மத்தியிலும் பகிர்ந்து பரப்பும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
அன்பான மக்களே!
முள்ளிவாயக்காலின் பின் ஈழத் தமிழர் தாயகம் சிங்களத்தின் முழுமையான ஆக்கிமிப்புக்குள்ளாகிப் போனது.
தமிழீழத் தேசியத் தலைவர் தலைமையில் கட்டப்பட்டிருந்த தமிழீழ நடைமுறையரசும் சிங்களத்தால் அழித்தொழிக்கப்பட்டது.
தமிழர் தாயத்தையும் தமிழீழ மக்களையும் பாதுகாப்பதற்காகத் தமிழ் மக்களால் அமைக்கப்படடிருந்த பாதுகாப்புப்பொறிமுறையும் சிதைவுற்றுப்போனது.
இன்று தமிழீழத்தின் வீதிகள் யாவும் தமிழீழத்தின் வீடுமனைகள் யாவும் வழிபாட்டுத் தலங்கள் யாவும் சிங்கள ஆக்கிமிப்புப்படைகளின் சப்பாத்துக்கால்களால் மிதிபட்டு அசிங்கப்பட்டுக் கிடக்கிறது. தமிழீழத் தாயகம் பெரும் அலங்கோலத்துக்குள்ளாகிக் கிடக்கிறது.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் விதிக்கு வீதி முளைக்கும் புத்தர் சிலைகளும் மேம்பாடு என்ற போர்வையில் சிங்களத்தால் மேற்கொள்ளப்படும் இனக்கபளீகர முயற்சிகளும் ஈழத் தமிழர் எதிர்கால வாழ்வை கேள்விக்குறியாக்கி வருகின்றன.
தமிழ் மக்கள் மட்டுமல்ல முஸ்லீம் மக்களும் சிங்களத்தின் கோரப்பற்களால் வேட்டையாடப்படுகின்றனர். ஒரு நாடு ஒரு மக்கள் என்ற கோசத்தின் அடிப்படையில் இலங்கைத்தீவினை சிங்கள நாடாகவும் சிங்கள தேசத்தின் நாடாகவும் ஏற்று அடங்கி வாழ் என கட்டளையிடுகிறது சிங்களம்.
ஈழத் தமிழர் தேசம் வரலாற்றுரீதியாக பல ஆக்கிமிப்புக்களைச் சந்தித்த போதும் தனது அடையாளத்தை சுதந்திர வேட்கiயினை என்றும் கைவிட்டது கிடையாது.
இலங்கைத்தீவு பிரித்தானியர் பிடியில் இருந்து விடுபட்ட பின்னர் சிங்களத்தின் ஒடுக்குமுறைகள் தமிழர் தேசத்தை பணிய வைத்ததில்லை. மாறாக ஈழத் தமிழர் தேசம் ஒடுக்குமறைகளுக்கு எதிராகத் தனது போராட்டங்களையும் தனது அரசியல் நிலைப்பாட்டையும் தீவிரப்படுத்தியே வந்திருக்கிறது.
சிங்களத்துடன் அரசியல்ரீதியான உடன்பாடு காண்பதற்கு முப்பது வருடங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட அரசியல் முயற்சிகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோல்வி கண்டபின்னர் சுதந்திரத் தமிழீழமே ஒரே வழி எனத் தந்தை செல்வா ஈழத் தமிழர் தேசத்துக்கான அரசியல் திக்கினை தெளிவாக வெளிப்படுத்தி காலம் ஆகிப் போனார்.
இதன் பின்னர் தந்தை செல்வா காட்டிய அரசியல் திக்கில் ஆயுதம் தாங்கிய போராட்டமாக தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்றது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் தமிழருக்கான சுதந்திர அரசு குறித்த நம்பிக்கையினை நடைமுறையில் செயற்படுத்திக் காட்டினார்.
ஒரு சிறிய தேசத்தை உலகின் துணையுடன் சிங்களம் ஆக்கிரமித்த போது பணிந்துபோய் போராட்டத்தைக் கைவிடுவதற்கு தேசியத் தலைவர் தயாராக இருக்கவில்லை. அடுத்த தலைமுறையின் கைகளில் பேராட்டம் தற்போது வந்துடைந்துள்ளது.
முள்ளிவாய்க்காலின் பின் நாம் புதிய வழிகளில் புதிய வாய்ப்புக்களின் அடிப்படையில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே இன்று நம்முன்னால் உள்ள தெரிவு.
களநிலைமைகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தாயகத்தில் தமிழர் தேசத்தின் பலம் கணிசமாகச் சிங்களத்தால் சிதைக்கபட்டுள்ளது.
சிறிலங்காவின் அரசியல் அமைப்பின் ஆறாம் திருத்தச் சட்டம் உட்பட நடைமுறையில் உள்ள பல்வேறு அடக்குமுறைச் சட்டங்கள் காரணமாகவும் இராணுவ ஆக்கிமிப்புக் காரணமாகவும் வெள்ளைவான்களின் காட்டுத்தர்பார் ஆட்சி காரணமாகவும் தாயகத்தில் உள்ள தலைவர்களுக்கும் மக்களுக்கும் உரிய அரசியல்வெளி மறுக்கப்பட்டுள்ளது.
ஈழத்தழிர் தேசத்தின் மீதான சிங்களத்தின் இனஅழிப்பு திட்மிட்டமுறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகிறது;. முழுமயான சிங்கள பௌத்த நிறுவனமான சிறிலங்கா அரசு தமிழர் தேசத்துடன் எந்தவகையான அதிகாரப்பகிர்வுக்கும் தயாராக இல்லை.
காலத்தை இழுத்தடித்து தமிழர் தேசத்தை இனக்கபளீகரம் செய்து முடிப்பதற்குத் தேவையான காலஅவகாசத்தைப் பெற்றுக்கொள்வதே சிங்களம் பேச்சுவார்தை நாடகம் ஆடுவதற்கான காரணமேயன்றி தாயகத் தமிழர் தலைமைகளுடன் தீர்வு எதனையும் காண்பதல்ல.
நாம் வரலாற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டாக வேண்டும்.
தந்தை செல்வா சிங்களத்துடன் பெற்றுக் கொண்ட பாடத்தினை விட புதிய பாடம் எதனையும் தற்போதய தாயகத் தலைவர்கள் சிங்களத்திடம் கற்கப்போவதில்லை.
தந்தை செல்வாயவின் பெயரை உச்சரிக்கும் தலைவர்கள் எவரும் அவரது அரசியல் ஞானத்தைப் புறந்தள்ள மாட்டார்கள். தமிழ் மக்கள் பாதுகாப்பாகாவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு ஈழத் தமிழர் தேசம் தான் இழந்த தனது இறைமையினை மீட்டெடுத்து தமிழீழத் தனியரசினை அமைப்பதனைத் தவிர வேறுவழியல்ல என்பதே தந்தை செல்வா நமக்குக் காட்டிச் சென்ற பாதை.
அவரது காத்;தில் சிங்களம் காட்டிய கொடுமைகளை விட ஆக்கிரமிப்பினை விடத் தற்போது பல்டமடங்கு கூடுதலாகவே தனது கொடிய முகத்தினைக் காட்டி நிற்கிறது. இச் சூழலில் தமிழீழத் தனியரசின் தேவை மேலும் வலுவடைந்துள்ளதே தவிர குறையடையவில்லை.
தற்பொதய சூழலில் மறுக்கப்பட்ட அரசியல் வெளி காரணமாக தமிழீழம் பற்றித் தயாகத் தலைவர்கள் பேசமுடியாத சூழல் இருப்பதனை நாம் புரிந்து கொள்கிறோம்.
அனைத்துலக அரசுகளும் தற்போது நாடு பிரியாத வகையிலான தீர்வுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் அனைத்துலக சமூகத்தின் ஆதரவு வேண்டி நாடு பிரியாத வகையில் தீர்வு காணும் முயற்சிகளில் தாயகத் தலைவர்கள் ஈடுபடுவதாக நாம் உணர்ந்து கொள்கிறோம்.
ஆனால் இந்த முயற்சிகள் எதுவுமே வெற்றியடையப்போதில்லை. சிங்களத்துக்கு அரசியல் தீர்வு காணும் எண்ணம் எதுவுமே கிடையாது.
அனைத்துலச சமூகத்தின் அழுத்தத்தை சிங்களம் தனது நீண்ட இராஜதந்திர அனுபவத்தின் ஊடாக கையாண்டு காலத்தை இழுத்தடித்து தமிழர் தேசத்தை இனக்கபளீகரம் செய்யும் நடவடிக்கைளைத் தீவிரப்படுத்துமேயன்றி அனைத்துலக அழுத்தத்துக்கு பணிந்து விடாது.
கடந்த மூன்று ஆண்டுகளில் அரசியல் தீர்வு காணும் முயற்சிகளில் தாயகத் தலைவர்களால் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியவில்லை என்பதே நடைமுறை உண்மை. இனியும் இதுதான் நடக்கப்போகிறது.
சிறிலங்காவில் ஒரு ;ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி சிங்களத்தின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அனைத்துலக சமூகம் சிந்திக்கக்கூடும். எந்தவொரு ஆட்சிமாற்றமும் சிங்கள தேசத்தின் பிரச்சினைகள் குறித்தும் அனைத்துலக உறவுகள் குறித்தும் அர்த்தம் கொண்டதாக இருக்குமேயன்றி ஈழத் தமிழர் தேசத்தின் பிரச்சினைகளில் எந்தவகையான சாதகநிலையையும் உருவாக்கப்போதில்லை. இதுவும் தந்தை செல்வா காலத்தில் தமிழர் தேசம் கற்றுக் கொண்ட பாடம்தான்.
இச் சூழலில் நாம் எவ்வர்று முன்னோக்கிச் செல்லப் போகிறோம்? இதற்கான வாய்ப்புக்கள் எவை? நம் முன்னால் சவால்கள் மட்டுமன்றி வாய்ப்புக்களும் ;இருக்கின்றன.
தாயக மக்கள் சிங்களத்தின் ஆக்கிமிப்புக்கு அடிபணியாது உறுதியாக இருக்கிறார்கள். சிங்களத்தின் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆசைவார்த்தைகளுக்கும் மத்தியலும் தமது வாக்குக்கள் மூலம் அதனைத் தாயக மக்கள் தெளிவாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடந்த முப்பது வருட காலத்தில் ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினை அனைத்துலக கவனத்தினை ஈத்துள்ளது.
போராட்ட காலத்தில் புலம்பெயர்நத ஈழத் தமிழர் தேசத்தின் அங்கங்களான ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட புலம் பெயர் மக்கள் உலகெங்கும் பரந்திருக்கிறார்கள்.
நமது தமிழகத்து உறவுகள் மத்தியில் ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்குரல் ஆழமான கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஈழத் தமிழர் தேசம் எனும் ஆலமரத்தைத் தாங்கிப்பிடிக்கும் விழுதுகளாக தமிழக மக்களும் உலகத் தமிழ் மக்களும் உள்ளனர்.
இலங்கைத்தீவின் புவிசார் அரசியல் மாற்றங்களும் நமக்கான கதவுகளைத் திறக்கும் வாய்ப்புக்களைக் கொண்டிருக்கிறது.
இவற்றையெல்லாம் ஈழத் தமிழர் தேசம் உரியமுpயில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்றைய சூழலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இரண்டு தளங்களில் தனது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
தமிழீழத் தனியரசே ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப்பிரச்சினைக்குத் தீர்வாக அமைய முடியும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் செயற்படுவது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது தளம். இதுவேதான் அரசியல் தீர்வு சார்ந்த எமது அடிப்படையான நிலைப்பாடு.
தமிழீழத் தனிரசுக்கான ஆதரவினை வென்றெடுப்பதற்காக அரசியல் இராஜதந்திரத் தளங்களில் நாம் செயற்படுகிறோம். புலம்பெயர் தமிழ் மக்கள் தமிழகம் மற்றும் உலகத் தமிழ மக்கள் ஆதரவுடன் நீதிக்காகக் குரல்தரக்கூடிய அனைத்துலக சிவில் சமுகத்தினைச் சேர்ந்தவர்களையும் இணைத்து தமிழீழ தனியரசுக்கான ஆதரவினை வென்றெடுக்க செயற்படுகிறோம்.
இரண்டாவது தளம் தாயகத்தில் உள்ள மக்களைப் பாதுகாப்பது, முள்ளிவாயக்காலில் எமது மக்களை இனஅழிப்பக்குள்ளாக்கியர்களை நீதியின் முன்னால் நிறுத்துவது, புலத்தில் வாழும் நமது மக்களின் நலன்களை மேம்படுத்துவது போன்ற நோக்கங்களைக் கொண்டு செயற்படும் தளம்.
சிங்களத்தின் இனக்கபளீகர முயற்சிகள் எவ்வாறு தடுத்து நிறுத்து முடியும?; தமிழர் தேசத்தின் நலன்களின் அடிப்படையில் தாயக மக்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களை எவ்வாறு முன்னெடுக்க முடியும்? இவையெல்லாம் அரசியல் தீர்வு குறித்த நிலைப்பாடுகளைக் கடந்து நாம் பொதுத்தளத்தில் செய்பட வேண்டீய மிக முக்கிய விடயங்களாகும்.
தாயகத்தில் உள்ள நமது மக்களளைப் பாதுகாக்க அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறையொன்றினை உருவாக்குவது அவசியமாக உள்ளது. தாயக மக்களின் மறுவாழ்வுக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் தாயகத்தலைவர்களால் முயற்சிகள் முன்னெடுக்கபடுவதும் அதற்கு நாம் உறுதுணையாக இயங்குவதும் அவசியமாகிறது.
இயன்றவரை தமிழ் அமைப்புக்கள் கூட்டாக ஒன்றிணைந்து செயற்படுவதும் முக்கியத்துவம் வாயந்தது. சிறிலங்கா அரசின் மீதான அனைத்தலக விசாரணைகளை முன்னெடுப்பதற்காகச் செயற்படுதல், தாயக மக்களின் பாதுகாப்புக்காக அனைத்துலகப் பொறிமுறையினை உருவாக்கல் உட்பட்ட சில செயற்திட்டங்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் உலகத் தமிழர் பேரவையும் ஒருங்கிணைந்து இயங்குவது குறித்து உடன்பாட்டையயும் நாம் நமக்குள் ஏற்படுத்தியுள்ளோம்.
தாயக மக்களுடனான நமது உறவாடலை வலுப்படுத்த வேண்டிய தேவையினையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உணர்ந்துள்ளது. இதற்கு வழிசமைக்கும் வகையில் தாயகம் நோக்கிய சிற்றலை வானொலிச் சேவையான நாதம் வானொலிச் சேவையினையும் நாம் முள்ளிவாயக்கால் மூன்றாண்டு நினைவுடன் ஆரம்பிக்கிறோம்.
இது ஈழத் தாயகத்தில் வாழும் நமது மக்களுடன் மட்டுமன்றி தமிழகம் மற்றும் மலேசியா சிங்கப்பூர் உட்பட்ட ஏனைய தமிழ் மக்களுடனுமு; நமது உறவாடலை வலுப்படுத்த உதவும்.
அனைத்துலக அரசுகள் தற்போதய சூழிலில் தழிழீழத்தனியரசினை ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப்பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக் கொள்ளூவிடினும் இந் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என நாம் உறுதியாக நம்புகிறோம். சிங்களத்தின் சமரசம் காணமுடியாத அமைப்புசார் சிக்கல்களும், புவிசார் நலன்கள் தொடர்பாக ஏற்படப்போகும் சமன்பாட்டு மாற்றங்களும் இந்நிலையைத் தோற்றுவிக்கும என்பது எமது நம்பிக்கை. எழும் வாய்புக்களை துல்லியமாகக் கணிப்பிட்டுச் செயற்படும் வகையிலான – மென்வலுவினை முதிச்ச்pயான முறையில் பயன்படுத்தும் ஒரு வலுமையமாக நாம் செயற்படுவோம்.
அன்பான மக்களே!
முள்ளிவாயக்காலில் நமது மக்கள் பட்ட துயர் வாரத்தைகளால் வர்ணிக்க முடியாதது. நமது மக்களுக்கு கிடைக்கும் நீதி என்பது நம்மை நாமே ஆளும் தனியரசின் ஊடாகத்தான் எட்டப்பட முடியும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்; நமது போராளிகள் புரிந்த ஈகம் ஆத்ம சக்தி கொண்டது. நீதியின் அடிப்படையில் தர்மத்தின் அடிப்படையில் நாம் தொடரந்தும் முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்றொ ஒரு நாள் வெற்றியினைப் பெற்றே தீரும். அந்த நாள் வரை நமது விடுதலைக்காக உறுதியுடன் தொடரந்து உழைப்போம் என முள்ளிவாயக்காலிலிலும் தமிழீழ விடுதலைப்போராட்டத்திலும் தமது உயிர்களை ஈந்தவர்கள் மீது நாம் உறுதி எடுத்துக் கொள்வோக!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
இவ்வாறு முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தி தமே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
——————————–
My fellow members of the Tamil Diaspora, our brethren from Tamil Nadu and friends of the Tamil people,
We have gathered here today to mark the 3rd anniversary of the genocide of the Tamil people in Mullivaikal. We have gathered here today to commemorate the lives of those perished at the end of the war in 2009 in Mullivaikal. We have gathered here to pay homage to the strength of those who have endured in Mullivaikal. We have gathered here today to bear witness to the mass atrocities that occurred in Mullivaikal. We have gathered here today to ensure that there is “never again” a Mullivaikal.
The term Mullivaikal has an indelible mark in the national psyche of our people. Just as the word ‘holocaust’ holds a very special place in the collective memory of the Jewish people, the term Mullivaikal holds a similar place in the collective memory not only of Eelam Tamils, but of Tamils around the world.
It is a special word that bears witness to the mass killing that was unleashed on the Tamil people on account of their Tamil nationality. It is there in Mullivaikal that the people of Tamil Eelam in vast numbers were hunted down and killed. They were killed while they were walking, while they were lying down, they were killed while they were eating, while praying, they were killed while in the house, while on the streets, they were killed while they were sick, wounded and in hospitals. No place was safe if you were a Tamil. No activity was safe if you were a Tamil.
However, the memorial services organized transnationally this week; the rallies held this week around the world; the humanitarian activities performed this week clearly send a clarion call that – while our hearts are broken – our spirit is not; while we are sad, we are determined. We are resolved to continue our struggle for an independent and sovereign state of Tamil Eelam. With a renewed vigor and with a renewed purpose. We are determined to avenge the killing of our people by realizing their dream. The horror visited upon our people in Mullivaikal mobilized Tamils around the world. The stakeholders of the freedom struggle are no longer Eelam Tamils alone, but Tamils everywhere.
Mullivaikal has transformed the mode of our struggle. Changing the mode of a struggle doesn’t mean status anti quo. Changing the mode of struggle doesn’t mean a return to appeasement politics. Changing the mode of struggle doesn’t revert to acquiescence politics. It is true that hard power has been replaced by soft power. However, the components of our present soft power are different from the soft power that we had earlier in the 50’s and 60’s. Our narrative, our grief, the outrage of international civil society, our togetherness, the togetherness not only of Eelam Tamils, but of Tamils around the world is different from makes us stronger than before. The battleground of the new democratic and diplomatic struggle undertaken today is different from the arena of the nonviolent struggle that took placebefore the war. The struggle undertaken in the Northern and Eastern provinces of Sri Lanka is different from the struggle to be waged in the Northeastern part of Sri Lanka in conjunction with the Tamils in Tamil Nadu and the Diaspora along with international civil society. In other words, the future struggles in the globalized world are different from the internal struggle undertaken in the 50’s and the 60’s.
While appreciating the new context of our struggle, we are also mindful of the world order in which we have to advance our cause. In the present world order, there is an inherent resistance to a formation of new states. The present world order is characterized primarily by intercourse between and among states. At the same time, we are also aware that the foreign policy of states is no longer determined only by the center or by foreign policy elites. The Indian government’s vote in favor of the HRC resolution on Sri Lanka in March and the Malaysian government’s abstention from the vote in the HRC are illustrations of the growing influence of the domestic polity – the people themselves – in foreign policy-making. Thus, we have to mobilize the people and the domestic political apparatus especially in nations where Tamils have an effective say.
In order to mobilize the domestic polity, it is essential that we establish that the Tamils’ very physical survival is not guaranteed in the island of Sri Lanka; in order to mobilize international public opinion, it is important to establish that what happened in Mullivaikal is not a personal excess of a few soldiers acting by themselves, but is premeditated, policy-oriented, institutionalized violence against the Tamil people; in order to mobilize international civil society, it is vital to establish that what happened in Mullivaikal, was not just war crimes and crimes against humanity, but was an act of genocide. Thus, it is not only a moral imperative but also a strategic necessity to establish that what happened in Mullivaikal is an act of genocide.
We must remind the world that the killing of 5,000 Bosnians in Srebenica was held to be an act of genocide by the Yugoslavia Tribunal. Five days ago, the International Criminal Tribunal of Rwanda held that the killing of 2,000 Hutu civilians constitutes an act of genocide. When the judicial tribunals hold that the killings of 5000 and 2000 people constitute an act of genocide, we believe a proper judicial forum will establish that the killing of the unaccounted for 146,679 Tamils is an act of genocide. However, some well-meaning activists believe that establishing the intent of the crime of genocide is a difficult task. Like in any criminal prosecution, intent can be inferred from the context. The employment of disproportionate use of force in Mullivaikal clearly demonstrates that the intent of the Sri Lankan politico-military leadership is to kill the Tamils on account of their Tamil nationality.
Thus, the TGTE is planning to hold People’s Tribunals, to resort to domestic judicial forums, and to convene academic panels in order to establish the truth about the mass killings of our friends, neighbors and relatives purely for being Tamil.
Through our coordinated and creative action, we can make a difference. Let’s resolve to realize the Tamils’ right to self-determination in its fullest form. Let’s resolve to establish an independent and sovereign state of Tamil Eelam.
The Thirst of the Tamils is the Establishment of Tamil Eelam.
Visvanathan Rudrakumaran
Prime Minister
Transnational Government of Tamil Eelam
Murugiah Suginthan