மது ஒழிப்புப் போராட்டம் ஓங்குக!
ஈகி சசி பெருமாள் அவர்களின் போராட்டக்களச் சாவு தமிழ் நாடு முழுவதும் மது ஒழிப்புக்கான புரட்சிப் போராட்டத்தைத் தூண்டியுள்ளது. சாராயத்திற்கு எதிரான மக்களின் வெறுப்பை, தீக்குச்சி நெருப்பாக இது ஒருமுகப்படுத்தியுள்ளது. ஈகி சசி பெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்றோம். மது ஒழிப்புக் கொள்கையில் பற்றுறுதியோடு இருக்கும் அவர்களின் குடும்பத்தார்க்கும் வாழ்த்துகள்.
இன்று தமிழ் நாடு முழுவதும் மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு பொதுமக்களின் அனைத்துப் பிரிவுகளில் இருந்தும் வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். இப்போராட்டத்தை ஒடுக்க அரசு பல வழிகளில் நடவடிக்கை எடுத்துவருகின்றது. அதனைக் கண்டிக்கின்றோம். போராட்டம் நடத்தும் மாணவர்களையும் பொதுமக்களையும் காவல்துறை ஒடுக்குவது கண்டிக்கப்பட வேண்டியது. போராடும் மாணவர்களை ஒடுக்க ஒத்துழைப்பு அளிக்காத பேராசியர்களைப் பதவியிறக்கம் செய்வது உள்ளிட்ட தவறான செயல்களில் அரசு எந்திரம் இறங்கியுள்ளதும் கண்டிக்கப்பட வேண்டியது. மதுவிலக்கை அரசு உடனே கொண்டுவந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
அன்புடன்,
உயர்திரு. உருத்திரகுமாரன்
தலைமையமைச்சர், நாடு கடந்த தமிழீழ அரசு |
முனைவர் வை. க. தேவ்
தலைவர், உலகத் தமிழ் அமைப்பு |
திரு. நாஞ்சில் பீற்றர்
தலைவர், வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை |
அமெரிக்கா, 14-ஆகத்து-2015