முனைவர் அருகோ அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் சந்திக்க வேண்டும்

தமிழரின் எழுச்சிக்காகவும், நலனுக்காவும், உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்த ‘எழுகதிர்’ ஆசிரியர் முனைவர் அருகோ அவர்கள்,  உடல் நலிவுற்று தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, இன்று அக்டோபர் 21, 2025 அன்று வீடு திரும்பியுள்ளார். ஐயாவின் உடல் நலிவுற்றதை அறிந்து கவலையுற்ற உலகத் தமிழர் அனைவரும், அவர் மீண்டு வீடு திரும்பியதை அறிந்து மகிழ்கின்றனர்.

ஐயா அவர்கள் எந்நாளும், எவரிடத்தும், எதன்பொருட்டும், எதையும் எதிர்ப்பார்த்து நின்றிடாத மானத்தமிழர். பொதுவாழ்வில் எளிமையும், நேர்மையும் கொண்டு தமிழ்த்தொண்டு ஆற்றிவந்த ஐயா அவர்களின் குடும்பம், உயிர் காக்கும் மருத்துவச் செலவினைக் கூடச் செய்ய இயலாத பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. தமிழின மீட்சிக்காகப் பெரும்பாடுபட்டு வரும் ஐயா முனைவர் அருகோ அவர்கள், தமிழினம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அறிவுப் பெட்டகமாவார். 

போராளி, முதுபெரும் அறிஞர், இதழியலாளர், வரலாற்று ஆய்வாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட ஐயா முனைவர் அருகோ அவர்களைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து உடல் நலனைக் கேட்டறிந்து, தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்பது உலகத் தமிழர் அனைவரின் விருப்பமாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்

உடையானாம் வேந்தர்க் கொளி.  -திருக்குறள்

முனைவர் அருகோ அவர்களை மாண்புமிகு முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் நேரில் பார்த்து நலம் விசாரிப்பதுன் வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்ய வேண்டும் எனும் உலகத் தமிழர் அனைவரின் விருப்பத்தை உலகத் தமிழ் அமைப்பு கோரிக்கையாக முன்வைக்கின்றது. 

அன்புடன்,

image.png

இராசரத்தினம் குணநாதன்

தலைவர், உலகத் தமிழ் அமைப்பு

உலகத் தமிழ் அமைப்பு
World Thamil Organization, Inc.
105 Ronaldsby Drive, Cary, North Carolina 27511, USA
(A Non-Profit Organization Registered in USA)

wtogroup@gmail.com | www.WorldThamil.org | @WorldThamilOrg