The primary mission of World Thamil Organization, Inc. (WTO) is to be a think tank to preserve, promote and secure the fundamental rights, justice and welfare of Tamils around the globe. WTO is committed to the political empowerment, social development and cultural enlightenment of the Tamils. Towards achieving this objective, WTO would strive to:
1. Promote awareness among the Tamils and other people about the equal rights and justice to which Tamils are entitled in their ancestral homelands;
2. Offer all material and other assistance possible within the law whenever Tamils are adversely affected in any way in any part of the world;
3. Cultivate and foster mutual understanding between Tamils and other nationalities globally; and
4. Be proactive in bringing justly deserved Tamil political issues to the world stage in order to arrive at fair and equitable solutions.
===================================================
குறிக்கோள்:
உலகளாவிய தமிழர்களின் அடிப்படை உரிமைகள், நீதி மற்றும் நலன்களைப் பாதுகாப்பது, முன்னெடுப்பது, மீட்டெடுப்பது ஆகியவற்றின் பொருட்டு ஒரு சிந்தனைத் தளமாகச் செயற்படுவதே உலகத் தமிழ் அமைப்பின் தலையாய குறிக்கோள் ஆகும். தமிழர்களின் அரசியல் அதிகார மாண்பு, குமுகாய மேம்பாடு மற்றும் பண்பாட்டுத் தெளிவு ஆகியவற்றுக்காக உலகத் தமிழ் அமைப்பு தொடர்ந்து உழைக்கும். இந்தக் குறிக்கோளை அடையும் பொருட்டு, கீழ்க்கண்டவற்றுக்காக உலகத் தமிழ் அமைப்பு அயராது பாடுபடும்:
1. தமிழர்கள் தங்களுடைய தாயக மண்ணில் பட்டயமாகப் பெற்று இருக்கவேண்டிய சம உரிமைகள் மற்றும் சமநீதி பற்றிய விழிப்புணர்வை தமிழர்கள் இடையிலும் ஏனைய மக்கள் இடையிலும் வளர்த்தல்.
2. உலகின் எப்பாகத்தில் வாழும் தமிழர்கள் எப்பொழுது துன்புற்றாலும் எவ்வகையில் துன்புற்றாலும் சட்டத்துக்கு உட்பட்டு எல்லா உற்றுழி உதவியும் உறுபொருளும் முன் நின்று வழங்குதல்.
3. தமிழர்களுக்கும் உலகின் ஏனைய நாட்டின மக்களுக்கும் இடையில் ஒத்த புரிந்துணர்வை வளர்த்தலும் பேணுதலும்.
4. நேர்மையான, சம நிலையான தீர்வை அடைவதற்காக விழிப்புடன் தமிழர்களின் அரசியல் சிக்கல்களை தொடக்கக் கட்டங்களிலேயே உலக அரங்கத்துக்குக் கொண்டுவந்து ஆவன செய்வது.