தன்னலமில்லாத் தமிழறிஞர் முனைவர் அருகோ மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்

தன்னலமில்லாத் தமிழறிஞர் முனைவர் அருகோ மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்

பொதுவாழ்வில் எளிமையும் நேர்மையும் கொண்டு தமிழ்த்தொண்டு ஆற்றியவர். தமிழினத்திற்கு வழிகாட்டியாகவும், தமிழினம் போற்றப்பட வேண்டிய அறிவுப் பெட்டகமாகவும் திகழ்ந்தார், தமிழின மீட்சிக்காகப் பெரும்பாடுபட்டார்.

தன்னலமற்ற இனநலன்சார்ந்த செயல்பாட்டால் உலகம் முழுவதும் வாழும் தமிழின உணர்வாளர்களின் உள்ளத்தைக் கவர்ந்தார். தமிழீழ விடுதலைக்குத் தொடர்ந்து குரல் கொடுத்தார். தன்முனைப்பைத் தவிர்த்து, தமிழர் நலனை முன்னிறுத்தினார்.

அவரது மறைவுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.

அன்புடன்,

இராசரத்தினம்

தலைவர், உலகத் தமிழ் அமைப்பு

திசம்பர் 23, 2025

நியுயார்க், அமெரிக்கா