தமிழர் இன அடையாள மாநாடு – நல்வாழ்த்து ! 

தமிழர் இன அடையாள மாநாடு நடத்தும் மலேசியத் தமிழர் தேசியப் பேரவைக்கு நல்வாழ்த்து !

மலேசியத் தமிழர் தேசியப் பேரவையினர் நடத்தும் தமிழர் இன அடையாள மாநாடு வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.  

மலேசியாவில் வாழும் தமிழர்கள் அனைவரும்  தங்கள் பிறப்புச்சான்றிதழில் தமிழர் என்று குறிப்பிட மலேசியத் தேசியப் பதிவுத்துறையும், மலேசிய உள்துறை அமைச்சகமும் ஆவன செய்ய வேண்டும். இதற்கான அரசாணையும் அறிவிப்பும் வெளியிட்டு, நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.  

மலேசியத் தமிழர் தேசியப் பேரவையினர் முன்னெடுக்கும் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாட்டிற்கு மலேசியத் தமிழர் அனைவரும் துணை நிற்க வேண்டும்.  ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் மேலும் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். 

மலேசியத் தமிழரின் அடையாளங்கள் காக்கப்பட வேண்டும் எனும் இம்மாநாட்டின் நோக்கம் நிறைவேற உலக தமிழ் அமைப்பின் சார்பாக எமது நெஞ்சார்ந்த நல்வாழ்த்தைத்  தெரிவிக்கின்றோம். 

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே ! 

அன்புடன், 

image.png

இராசா இளங்கோவன் 

தலைவர், உலகத் தமிழ் அமைப்பு 

19 மார்ச்சு 2026, வாசிங்டன் டி.சி., அமெரிக்கா

World Thamil Organization, Inc.
105 Ronaldsby Drive, Cary, North Carolina 27511, USA
(A Non-Profit Organization Registered in USA)

wtogroup@gmail.com | www.WorldThamil.org | @WorldThamilOrg