மாவீரர் நாள் 2014 – உலகத் தமிழ் அமைப்பின் தீர்மானங்கள் !

மாவீரர் நாள் 2014 – உலகத் தமிழ் அமைப்பின் தீர்மானங்கள் !

Layout 1

  1. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்புப் போரில் உயிர் இழந்த தமிழீழ மக்களுக்கும், மாவீரர்களுக்கும், போர் நிறுத்தம் கோரி உயிர் ஈகம் செய்த அனைவருக்கும் உலகத் தமிழ் அமைப்பு அஞ்சலி செலுத்துகிறது.
  2. ஐ. நா. மனித உரிமை ஆணையர் விசாரணையை விரைந்து முடித்து தமிழர்க்கான நீதி கிடைக்க வழி வகை செய்ய உலகத் தமிழ் அமைப்பு வேண்டுகிறது.
  3. தமிழீழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பை உடனே நடத்தும்படி ஐ.நா. அவையை உலகத் தமிழ் அமைப்பு கோருகிறது.
  4. உலகில் வாழும் 10 கோடித் தமிழர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு  இலங்கை  தொடர்பான அயல் உறவுக் கொள்கைகளை இந்திய நடுவண் அரசு வகுக்க வேண்டும்.
  5. தமிழ் நாட்டில்  உள்ள எதிலிகள்  முகாம்கள் அனைத்தையும் உடனே மூடி, அனைவரையும் போல் தமிழீழ உறவுகள் தரமான வாழ்க்கை வாழ தமிழ்நாட்டு அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  6. காவேரி ஆற்றுநீர் பாயும் மாவட்டங்களில் வாழும் மக்களின் வாழ்வைப் பாலைவனமாக்கும் காவேரிப் படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.
  7. தமிழ் மொழி வழிக் கல்வியை அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டுவரவும், மதுக்கடைகளை மூடி மக்கள் நல்வாழ்வு வாழ வழி செய்யவும், இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பும் இழப்பீடும் வழங்க அனைத்து உரிய நடவடிக்கைகளையும் தமிழ்நாட்டரசும், நடுவண் அரசும் எடுக்க வேண்டும்.

– உலகத் தமிழ் அமைப்பு