பிரணாப் முகர்ஜியை திமுக ஆதரிப்பது மன்னிக்க முடியாத இனத்துரோகம்

2009ல் இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை சிங்கள அரசு இனப்படுகொலை செய்த போரில்
துணைபோன இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை
திமுக ஆதரித்தால் மன்னிக்கமுடியாத தமிழினத் துரோகம் ஆகும். என தமிழ்த் தேசப்
பொதுவுடைமைக்கட்சித் தலைவர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை
நிறுத்துவதற்கு காங்கிரஸ் தலைமை விரும்புவதாகச் செய்திகள் வெளிவருகின்றன.
தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி, பிராணப் முகர்ஜி தமது நீண்ட நாள் நண்பர்
என்றும் அவரை ஆதரிப்போம் என்றும் கூறியுள்ளார்.