மே 20 ஞாயிற்றுக்கிழமை நினைவுச்சுடர்களை ஏந்துவோம், கடற்கரைக்கு வாருங்கள்! – வைகோ அழைப்பு

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, நம் ஊனோடும், குருதியோடும், உணர்வோடும், பின்னிப்பிணைந்து உள்ள தொப்புள் கொடி உறவுகளாம் ஈழத்தமிழ்க் குலத்தை, வேருடன் அழிக்க, இனக்கொலை நடத்தினான் சிங்களன்.

இந்திய அரசின் துரோகத்தாலும், அணு ஆயுத வல்லரசுகளின் ஆயுத உதவியாலும், சமர்க்களத்தில் நிகரற்ற வீரர் கூட்டமாம் விடுதலைப்புலிகளுக்கு, யுத்தகளத்தில் தற்காலிக வீழ்ச்சியை, மகிந்த ராஜபக்சேயின் கொலைகார அரசு ஏற்படுத்தியது.