உலகத் தமிழ் அமைப்பு வெள்ளி விழா – தலைவர்கள் வாழ்த்து !

உலகத் தமிழ் அமைப்பு – வெள்ளி விழா!

உலகத் தமிழ் அமைப்பு 1991-ஆம் ஆண்டு தொடங்கப்பெற்று வணிக நோக்கமற்ற நிறுவனமாக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு, அமெரிக்க நாட்டின் சட்ட திட்டங்களுக்கு முழுவதுமாக உட்பட்டு, சிறப்பாக இயங்கி, கடந்த 25 ஆண்டுகளாக நற்பணியாற்றி வருகின்றது. தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பேணிப் பாதுகாத்து மேலும் செழிப்புடன் வளர்வதற்காகவும்; உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களின் நலன்களுக்காகவும்; இவற்றுடன் மிகவும் முதன்மையான குறிக்கோளான தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து, தன்னாட்சி உரிமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவும், உலகத் தமிழ் அமைப்பு கடந்த 25 ஆண்டுகளாக அயராது உழைத்து வருகின்றது.

உலகத் தமிழ் அமைப்பின் 25-ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. உலகின் பல நாடுகளிலும் இருந்து அறிஞர் பெருமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

நாள்: அக்டோபர் 8, 2016 – சனிக்கிழமை(காலை 9:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை)

இடம்: MERCER MIDDLE SCHOOL AUDITORIUM,
42149 GREENSTONE DRIVE
ALDIE, VIRGINIA 20105
USA
[Near WASHINGTON, DC’S DULLES INTERNATIONAL AIRPORT]

சிறப்பு விருந்தினர்:
மாண்புமிகு பேராசிரியர் முனைவர் ப. இராமசாமி, துணை முதலமைச்சர், பினாங்கு மாநிலம், மலேசியா

சிறப்புப் பேச்சாளர்கள்:
மாண்புமிகு திரு. உருத்திரகுமாரன், நாடு கடந்த தமிழீழ அரசு
திரு. பெ. மணியரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
திருமதி வானதி சீனிவாசன், துணைத் தலைவர், தமிழ் நாடு பாரதிய ஜனதா கட்சி
திரு. சாம் ராஜப்பா, Senior Editor (Rtd), The Statesman, Calcutta
திரு. செ. முத்துசாமி, Ex-MLC
முனைவர் ம. நடராசன், நிறுவனர், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
திரு. ஆழி செந்தில்நாதன், மொழி நிகர்மை – உரிமை பரப்பியக்கம்
திரு. கோ. இளவழகன், ‘தமிழ்மண்’ பதிப்பகம்
மற்றும் பலர்.

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு; தமிழர் உரிமைகள்; வெளியுறவுக் கொள்கையும் தமிழர் நலமும்; தந்தை பெரியார் பிறந்தநாள் நினைவு; இன்னும் பல தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெறும்.

நுழைவுக் கட்டணம் இல்லை. உணவுக் கட்டணமும் இல்லை ; ஆனால், முன் பதிவு தேவை — உணவு அளவு தெரியவேண்டுமே ! முன் பதிவுக்கு சுட்டவும்.

நம் அமைப்பின் வெள்ளி விழாவைச் சிறப்பாகக் கொண்டாட உங்கள் அனைவரின் துணையும் தேவைப்படுகிறது. உங்கள் உதவியை நன்கொடையாக அளிக்க, சுட்டவும்.
அல்லது உங்கள் காசோலையை (payable to: “World Thamil Organization, Inc.”) கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

WORLD THAMIL ORGANIZATION, INC
105 RONALDSBY DRIVE
CARY, NORTH CAROLINA 27511-6536

தாங்கள், தங்கள் உற்றார் உறவினர், நண்பர்களுடன் திரளாகக் கலந்துகொண்டு, இவ்விழாவைச் சிறப்பிக்க வேண்டுகின்றேன். வருக ! வருக !! என பணிவன்புடன் அழைக்கின்றேன்.

அன்புடன்,
முனைவர் வை. க. தேவ்
தலைவர், உலகத் தமிழ் அமைப்பு

 

உலகத் தமிழ் அமைப்பு வெள்ளி விழா – ஐயா பழ. நெடுமாறன் வாழ்த்து !

உலகத் தமிழ் அமைப்பு வெள்ளி விழா – புட்பவனம் குப்புசாமி வாழ்த்து !

உலகத் தமிழ் அமைப்பு வெள்ளி விழா – ஆசிரியர் வீரமணி வாழ்த்து !

உலகத் தமிழ் அமைப்பு வெள்ளி விழா – விடுதலை இராசேந்திரன் வாழ்த்து !

உலகத் தமிழ் அமைப்பு வெள்ளி விழா – பேரா. சுப. வீரபாண்டியன் வாழ்த்து !

உலகத் தமிழ் அமைப்பு வெள்ளி விழா – தோழர் ஐயா நல்ல கண்ணு வாழ்த்து !

உலகத் தமிழ் அமைப்பு வெள்ளி விழா – தோழர் சி. மகேந்திரன் வாழ்த்து !

உலகத் தமிழ் அமைப்பு வெள்ளி விழா – கவிஞர் காசி ஆனந்தன் வாழ்த்து !

உலகத் தமிழ் அமைப்பு வெள்ளி விழா – தேனிசை செல்லப்பா வாழ்த்து !

உலகத் தமிழ் அமைப்பு வெள்ளி விழா – நடிகர் திரு. சத்தியராஜ் வாழ்த்து !

உலகத் தமிழ் அமைப்பு வெள்ளி விழா – தோழர் சமர்ப்பா குமரன் வாழ்த்து !

உலகத் தமிழ் அமைப்பு வெள்ளி விழா – தோழர் திரு. பெ. மணியரசன் வாழ்த்து !

உலகத் தமிழ் அமைப்பு வெள்ளி விழா – தோழர் சுந்தர் இராசன் வாழ்த்து !

உலகத் தமிழ் அமைப்பு வெள்ளி விழா – தோழர் தியாகு வாழ்த்து !

wto-invitation-photos_new