உயர்திரு கவிக்கோ அப்துல் இரகுமான் அவர்களுக்கு வீரவணக்கம் !

உயர்திரு கவிக்கோ அப்துல் இரகுமான் அவர்களுக்கு வீரவணக்கம் !

தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்த உயர்திரு கவிக்கோ அவர்கள் தனது ஆழ்ந்த அறிவாலும் சிந்தனைத் திறனாலும் தமிழ் மேம்பட ‘வானம்பாடி’ இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர் ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். தன் இறுதி மூச்சுள்ளவரை தமிழரின் நலனுக்காகவே முழு ஆற்றலையும் மூலதனமாகியவர். தமிழ் மக்கள் – மொழி நலன்களுக்காகத் துவளாது, அயராது, அச்சமின்றி உழைத்தவர். உயர்திரு. கவிக்கோ அவர்கள் உயிர்நீத்தார் எனும் செய்தி உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்குத் தாங்கொணாத் துயரை ஏற்படுத்தியுள்ளது.

WTO Condolence Letter to Thiru Kavikko

“அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார் – என் உடையரேனும் இலர்.”

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் – என்பும் உரியர் பிறர்க்கு.”

போன்ற திருக்குறள்களுக்கு இணங்க அனைவராலும் அன்பு செலுத்தப்பட்ட, மதிக்கப்பட்ட தமிழ் உணர்வாளரான உயர்திரு. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் சார்பாக உலகத் தமிழ் அமைப்பு வீரவணக்கத்தைச் செலுத்துகிறது. அவரைப் பிரிந்து வாடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் அவர் சென்ற பாதையில் தொடர்ந்து பயணித்து, தமிழ் மொழி வளர பாடுபட உறுதி ஏற்று நடப்பதே நாம் அனைவரும் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

முனைவர் வை. க. தேவ்
தலைவர், உலகத் தமிழ் அமைப்பு
dev@geneticsassociates.com
www.worldthamil.org