மனிதகுல வரலாற்றில் பேரவலம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை !

மனிதகுல வரலாற்றில் பேரவலம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை !
அமெரிக்கா, 05-சூன்-2017

ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மே மாதம் ஈழத்தின் மீதான இனப்படுகொலையை நினைவுகூர்ந்து மலர்தூவி, சுடரேந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் சென்னை தமிழர் கடலாம் மெரினாவில் நினைவஞ்சலி செலுத்த வந்த மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் மா. டைசன், தோழர் இளமாறன், தோழர் அருண்குமார் ஆகிய நான்கு தமிழர்கள் மீது குண்டர் சட்டப்படி சிறையிலடைத்துள்ளது தமிழக அரசு என்ற செய்தி உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழ தமிழ் மக்கள், தமிழ்நாட்டு தமிழ் மக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, சனநாயகத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை ஏற்புடையது அல்ல.

USA Tamils Letter to Tamilnadu CM Release Thirumurugan

அந்த நான்கு தமிழர்கள் மீதான வழக்கைத் திரும்பப் பெற்று உடனடியாக விடுதலையை உறுதிசெய்ய ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம். இக்கோரிக்கையை அமெரிக்க, கனடா மற்றும் பிரிட்டானியாத் தமிழ் அமைப்புகளின் சார்பாக நாங்கள் கூட்டாக முன்வைக்கிறோம்.
நன்றி!

மாண்புமிகு உயர்திரு. வி. உருத்ரகுமாரன்
தலைமையமைச்சர், US Members of Parliament of the TGTE
TGTE-US.org

முனைவர் வை. க. தேவ்
தலைவர், உலகத் தமிழ் அமைப்பு
dev@geneticsassociates.com
www.worldthamil.org

திரு. ச. குகபாலன்
தலைவர், இலங்கை தமிழ் சங்கம்
president@sangam.org
www.sangam.org

மருத்துவர் காருண்யன் அருளானந்தன்
தலைவர், அமெரிக்கத் தமிழர் அரசியற் செயலவை
president@ustpac.org
www.ustpac.org