உலகத் தமிழ் அமைப்பின் சிறப்புக் கூட்டம் – சூலை 6 @ சான் ஆண்டோனியோ, டெக்சாசு

உலகத் தமிழ் அமைப்பின் உறுப்பினர்கள் & ஆதரவாளர்களுக்கு, வணக்கம் !

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 37 ஆவது தமிழ் விழா சான் ஆண்டோனியோ, டெக்சாசில் நடைபெறவுள்ளது. அங்கு உலகத் தமிழ் அமைப்பு (WTO) ஒருங்கிணைக்கும் இணையமவர்வு “தமிழரின் உரிமையும் விடுதலையும்” எனும் தலைப்பில் சூலை 06, 2024, காலை 10:00 மணிக்கு, அறை எண் 218 இல் நடைபெறும்.

அக்கூட்டத்தில் திருவாளர் தி. வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) அவர்களும், திருமதி அனந்தி சசிதரன் (மேனாள் வடமாகாண மன்ற உறுப்பினர்) அவர்களும், திருமதி அற்புதம் அம்மாள் (மனித உரிமைப் போராளி) அவர்களும், திருவாளர் ஏ. டி. பி. போசு (தமிழ்க் கல்வி செயல்பாட்டாளர்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

உலகத் தமிழ் அமைப்பு
World Thamil Organization, Inc.
105 Ronaldsby Drive, Cary, North Carolina 27511, USA
(A Non-Profit Organization Registered in USA)
E-mail: wtogroup@gmail.com