வெல்லட்டும் தமிழ்த் தேசியம் !

வெல்லட்டும் தமிழ்த் தேசியம் – வரலாற்றுச் சிறப்பு மிக்க அமெரிக்கப் பயணத்திட்டம் !

ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறும் பேரவை (FeTNA) விழா, இவ்வாண்டு வடக்கு கரோலினா மாநிலம், ராலே நகரில் அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவையின் கீழ் 38வது தமிழ்விழாவாக யூலை 3, 4 & 5 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பம்சமாக, இதுவரை எந்த ஆண்டும் இல்லாத வகையில் மூன்று ஆகச்சிறந்த தமிழ் ஆளுமைகளான தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ. மணியரசன், மொழியியல் அறிஞர் தக்கார் ம. சோ. விக்டர், வராலாற்று ஆய்வறிஞர் திரு. மன்னர் மன்னன் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டு மாபெரும் தமிழின எழுச்சியை ஏற்படுத்தினர்.

மேலும், இவ்விழாவுக்குப் பின், இந்த அறிஞர் பெருமக்கள் பல்வேறு அமெரிக்க மாநிலங்களுக்கு ‘வெல்லட்டும் தமிழ்த் தேசியம்’ என்ற தலைப்பில் பயணம் செய்து பல தமிழ்ச் சங்கங்கள், அமைப்புகள் நடத்தும் நிகழ்வில் பங்குபெற்றனர்.

7/03 – 7/05 – பேரவை (FeTNA) இணையமர்வுகள்
7/06/2025 – கேரி தமிழ்ப் பள்ளி
7/12/2025 – மிசௌரி தமிழ்ச்சங்கம்
7/13/2025 – நியூசெர்சி தமிழ்ப் பேரவை
7/18/2025 – பென்சில்வேனியா தமிழர் பேரவை
7/19/2025 – வெர்சீனியா தமிழ்ச்சங்கம்
7/20/2025 – கபிலர் பாரி வாசகர் வட்டம் & வீரத்தமிழர் முன்னணி
7/25/2025 – ஆஸ்டின் தமிழ்ச்சங்கம், ஆஸ்டின் இந்து கோயில்
7/26/2025 – வடக்கு டெக்சாஸ் தமிழ்ச்சங்கம், டாலஸ் முருகன் கோயில்
7/27/2025 – அமெரிக்க ஈகைத் தமிழ்ச் சமூகம், அட்லாண்டா தமிழர் பேரவை
7/28/2025 – அட்லாண்டா தமிழ்ச் சங்கம்
7/30/2025 – டென்னசி தமிழ்ச் சங்கம்
8/2/2025 – தாம்பா தமிழ்ச் சங்கம்
8/3/2025 – ஆர்லாண்டோ தமிழர்கள்
8/9/2025 – கரோலினா தமிழ்ச்சங்கம்
8/10/2025 – உலகத் தமிழ் அமைப்பு

வராலாற்று ஆய்வறிஞர் திரு. மன்னர் மன்னன் அவர்கள் யூன் 27 முதல் யூலை 29 வரை இங்கு ஒருங்கிணைக்கப்பட்ட அனைத்துக் கூட்டங்களிலும் கலந்துகொண்டார். மேலும் ஐயா பெ. ம. அவர்களுக்கும், ம. சோ. விக்டர் அவர்களுக்கும் அனைத்துப் பயணங்களிலும் உறுதுணையாக இருந்தார்.

அதேபோல் மொழியியல் அறிஞர் தக்கார் ம. சோ. விக்டர் அவர்களும், அகவை மூப்பையும் பொருட்படுத்தாது, யூன் 27 முதல் யூலை 26 வரை, அமெரிக்கா & கனடா ஆகிய நாடுகளில் ஒருங்கிணைக்கப்பட்ட பல கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் 79 அகவையில் இரவு பகல் பாராமல் பயணித்து, 44 நாட்களில் (யூன் 27 – ஆக. 11), வட அமெரிக்காவில் உள்ள 19 மாகாணங்களில், 27 நிகழ்வுகளில், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, 8 தமிழ்ச்சங்கங்கள், 10 தமிழ் அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள் ஊடாக தமிழ் சொந்தங்களைச் சந்தித்து சிறப்பித்து, ஒரு வரலாற்றுச்சிறப்பு மிக்க தமிழ்த் தேசியப் பயணத்தை நிறைவு செய்துகொண்டு ஆகத்து 11 ஆம் நாள் தாயகம் திரும்பினார்.

இப்பயணங்கள் யாவற்றையும் மேற்குறிப்பிட்ட அனைத்து அமைப்புகள், தமிழ்ச் சங்கங்கள் ஆகியவற்றுடன் இணைத்து உலகத் தமிழ் அமைப்பு ஒருங்கிணைத்தது. அந்தந்த மாநிலங்களில் உள்ள தமிழர்கள் பெருவாரியாக வந்து கலந்துகொண்டு பேராதரவு வழங்கினார்கள்.

-உலகத் தமிழ் அமைப்பு