நன்றியும் பாராட்டும் !
பெறுநர்
திரு. கார்த்திகேய சிவசேனாபதி
நிர்வாக அறங்காவலர்
சேனாபதி காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி அறக்கட்டளை
வணக்கம் ! உலகத் தமிழ் அமைப்பு நடத்திய ‘ஏறுதழுவல் – தமிழர் உரிமை’ எனும் தலைப்பிலான தொலைப்பேசிக் கூட்டழைப்பில் தாங்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
மனிதர்களின் பண்பாட்டு வளர்ச்சிப் படிநிலையில் மாடுகளின் பங்கையும், பொருளாதாரத் தற்சார்பிற்கு நாட்டுமாடுகளின் தேவையையும், நாட்டுமாடுகளின் இருப்பிற்கும் ஏறுதழுவலுக்குமான நெருங்கிய பிணைப்பையும், ஏறுதழுவல் நடத்துவதில் தற்போதுள்ள சட்டச்சிக்கலையும், பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் வணிகச் சூழ்ச்சியையும் சிறப்பாக எடுத்துரைத்தீர்கள். மேலும் அனைவரின் வினாக்களுக்கும் விளக்கமாகவும் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலும் விடையளித்தீர்கள்.
தமிழரின் பண்பாட்டு அடையாளமாகவும், பொருளியல் அடிப்படையாகவும், வாழ்வியல் உரிமையாகவும் விளங்கும் ஏறுதழுவலை மீட்டெடுக்கத் தாங்கள் தொடர்ந்து பரப்புரை மேற்கொள்வதையும் போராடுவதையும் நெஞ்சாரப் பாராட்டுகிறோம்.
அன்புடன்,
முனைவர் வை. க. தேவ்
தலைவர், உலகத் தமிழ் அமைப்பு
01-சனவரி-2017
அமெரிக்கா