Joint New Year Message from World-wide Tamil Organizations and Entities: A Solemn Pledge to Work for Justice, Protection, and Freedom of the Tamil People

Joint New Year Message from World-wide Tamil Organizations and Entities:
A Solemn Pledge to Work for Justice, Protection, and Freedom of the Tamil People

January 01, 2015

On this New Year’s Day, January 1, 2015, Tamil organizations and entities around the world pledge our renewed commitment to bring dignity, freedom, justice, and peace to our Tamil brethren living in the occupied NorthEast region constituting the Tamil Nation in the island of Sri Lanka. We are united in our quest for freedom for our people who have been oppressed by successive Sri Lankan regimes.

We thank the International Community for leading and supporting the Resolution at the March 2014 Session of the UNHRC, which initiated the investigation by the Office of the UN High Commissioner for Human Rights (OHCHR) for violations of human rights and related crimes against the Tamil people. We are hopeful that the OHCHR Investigation on Sri Lanka (OISL) will lead to accountability and remedial justice for genocide, war-crimes, and crimes against humanity committed against the Tamil people.

As the Sinhala leaders campaign for the next Sri Lankan Presidential election scheduled for January 8th 2015, the International Community should be cognizant of the belligerent declarations by both major Sinhala candidates against the OISL investigation. Notably, neither has offered any political solution to the Tamils. As has been the unfortunate history of Sinhala dominated Sri Lankan political landscape, both candidates are re-enforcing the permanent and unassailable Sinhala ethnic majoritarianism in marginalizing and disempowering the Tamils. We believe, changing the nature of the state, not just a change in government, is the viable path to genuine democracy and permanent peace in the island.

Since the end of the war in May 2009, Sri Lanka has engaged in accelerated destruction of the Tamil Nation including forced demographic changes, illegal occupation of lands belonging to Tamils, disrupting religious ceremonies and destruction of places of worship, assault on press freedom, continuing disappearances and torture, and suffocating military occupation, all perpetuating the genocide. Under these circumstances, we call upon the International Community to urgently bring about an interim-mechanism to protect the Tamil people from these genocidal activities by Sri Lanka, and to create the conditions for the Tamil people to exercise their right to self-determination via a referendum to decide their political future.

At this propitious time of year, we call for a peaceful world thriving with justice, equality and freedom for all.
—-

உலகளாவிய தமிழ் அமைப்புக்களின் கூட்டுப் புத்தாண்டுச் செய்தி:
தமிழ்மக்களுக்கு நீதி, பாதுகாப்பு, சுதந்திரம் ஆதியன நிலைநிறுத்த உழைக்கும் உறுதிமொழி

சனவரி ௦1, 2௦15

புத்தாண்டு தினமாகிய சனவரி ௦1, 2௦15 நாளில், இலங்கைத்தீவில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட வடகிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த தமிழ்த்தேசத்தின் நமது உடன்பிறந்த தமிழ் உறவுகளுக்கு சுயமாண்பு, சுதந்திரம், நீதி, நிலையான அமைதி கிடைக்க ஒன்றுபட்டு உழைப்போமென்று உலகளாவிய தமிழ் உருவாக்கங்கள் சார்பாக மீண்டும் எமது உறுதிப்பாட்டை வழங்குகிறோம். மாறிமாறி வரும் சிறிலங்கா அரசுகளால் ஒடுக்கப்பட்டு நிற்கும் எமது மக்களின் விடுதலைக்கான வேணவாவிலும் நாம் ஒருமைப்பட்டுள்ளோம்.

தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் தொடர்பான குற்றங்கள் மட்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைக்கு அடிகோலிய மார்ச் 2௦14 தீர்மானத்தை வழிநடத்தியும், ஆதரவுதந்தும் உதவிய அனைத்துலக சமூகத்திற்கு எமது நன்றிகள். ஐநா மனித உரிமைகள் ஆணையத்தால் முன்எடுக்கப்பட்டுள்ள சிறிலங்கா தொடர்பான இந்தப் பன்னாட்டு விசாரணையானது, தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்புரைப்பதோடு, பரிகார நீதிக்கும் வழிவகுக்கும் என்று நாம் நம்புகின்றோம்.

சனவரி 8 இல் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் சிங்களத் தலைவர்கள் ஈடுபட்டுள்ள இவ்வேளையில், இரு பிரதான சிங்களத் தலைவர்களும் ஐநா விசாரணைக்கு எதிராகப் புனைந்துள்ள எதேச்சாதிகாரமான பிரகடனங்களை அனைத்துலக சமூகம் கவனத்திற் கொள்ளவேண்டும். குறிப்பாக, தமிழருக்கான அரசியற்தீர்வு எதனையும் எந்தத் தரப்பும் முன்வைக்கவில்லை. சிங்கள மேலாண்மை சார்ந்த சிறிலங்கா அரசியல் வரலாற்றுக்கு அமைவாக, இரு வேட்பாளர்களுமே சிங்கள இனத்தின் “நிரந்தர பெரும்பான்மை”ப் போக்கை நிலைநிறுத்தி அதன்மூலம் தமிழர்களின் வலுநீர்த்து அவர்களை ஓரங்கட்ட முனைந்துள்ளனர். அரசாங்கத்தை மாற்றுவதால் மட்டுமன்றி, அரசின் அடிக்கட்டமைப்பையே மாற்றுவதன் மூலமே உண்மையான மக்களாட்சியையும், நிரந்தரமான அமைதியையும் இந்தத் தீவிலே ஏற்படுத்தமுடியுமென்று நாங்கள் நம்புகிறோம்.

மே 2௦௦9 போர் முடிவுற்றதிலிருந்து, சிறிலங்கா அரசானது தமிழ்த்தேசத்தைத் துரிதகதியில் அழித்தொழிக்கத் தலைப்பட்டுள்ளது. வலிந்து திணிக்கப்படும் குடியியற் பரம்பல் மாற்றங்கள், தமிழருக்குச் சொந்தமான நிலங்களைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல், மதச் சடங்குகளைக் குழப்பி வழிபாட்டுத் தலங்களையும் அழித்தல், பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்குதல், தொடரும் கொடுவதைகள், காணாமற்போதல்கள், மூச்சடைக்கும் இராணுவ ஆக்கிரமிப்பு என்பனவாக இனப்படுகொலை இன்னும் நீட்டிக்கப் பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்தப் புறச்சூழலில், சிறிலங்காவின் இனஅழிப்பு நடவடிக்கையிலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கு உரிய இடைக்காலப் பொறிமுறை ஒன்றை உடனடியாக ஏற்படுத்துமாறு அனைத்துலக சமூகத்தைக் கோரி நிற்கிறோம். மேலும், தமிழ் மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை முன்னெடுத்து ஒரு பொதுவாக்கெடுப்பின் மூலம் தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கச் சாதகமான சூழலை ஏற்படுத்துமாறும் வேண்டுகின்றோம்.

இந்த மங்களகரமான புத்தாண்டு நன்நாளில், நீதியும், சமத்துவமும், சுதந்திரமும் தழைத்தோங்கும் அமைதி நிறைந்த உலகை நாம் வேண்டிநிற்கிறோம்.

The following Tamil organizations and entities are jointly releasing this 2015 New Year Message:

1.    Academy of Tamil Studies, Malaysia
2.    Akila Inthiya Tamilar Katchi, Tamil Nadu, India
3.    Anti Methane Project Federation – மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு, Tamil Nadu, India
4.    Association For Community and Dialogue, Malaysia
5.    British Tamil Conservatives, UK
6.    British Tamil Forum, UK
7.    Center for War Victims & Human Rights, Canada
8.    Communist Party of India – Tamil Nadu Secretariat, India
9.    Communist Party (M-L) People Liberation – Tamil Nadu, பொதுவுடைமைக் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை – தமிழ்நாடு, Tamil Nadu, India
10.    Council of Temples, Malaysia
11.    Dravida Munnetra Kazhagam – திராவிட முன்னேற்றக் கழகம், Tamil Nadu, India
12.    Forum Against War Crimes and Genocide – போர்க்குற்றங்கள் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம், Tamil Nadu, India
13.    Green Student Movement, Tamil Nadu, India
14.    Group of Concerned Citizens, Malaysia
15.    Hindu Defense Brigade, Malaysia
16.    Ilankai Tamil Sangam, USA
17.    International Council of Eelam Tamils (ICET)
18.    ICET: Council of Eelam Tamils in Germany, Germany
19.    ICET: Danish Federation of Tamil Associations, Denmark
20.    ICET: Dutch Tamil Forum, Netherland
21.    ICET: Italian Council of Eelam Tamils, Italy
22.    ICET: Maison du Tamil Eelam France, France
23.    ICET: National Council of Canadian Tamils, Canada
24.    ICET: National council of New Zealand Tamils, New Zealand
25.    ICET: Norwegian Council of Eelam Tamils, Norway
26.    ICET: Swiss Council of Eelam Tamils, Switzerland
27.    ICET: Tamil Cultural Centre- Belgium, Belgium
28.    International Council of Eelam Tamils
29.    Malaysian Indian Youth Council, Malaysia
30.    Malaysian Tamil Forum, Malaysia
31.    Mouvement Against Tamils Genocide, Mauritius
32.    Naam Thamilar Katchi, நாம் தமிழர் கட்சி,  Tamil Nadu, India
33.    National Council of Canadian Tamils, Canada
34.    New Zealand Tamil Society, New Zealand
35.    Norwegian Council of Eelam Tamils, Norway
36.    Pasumai Thaayagam Foundation –  பசுமைத் தாயகம், Tamil Nadu, India
37.    Pattali Makkal Katchi  – பாட்டாளி மக்கள் கட்சி, Tamil Nadu, India
38.    Penang Society for Advancement of Tamils, Malaysia
39.    People for Equality and Relief in Lanka, USA
40.    People’s Movement Against Nuclear Energy – அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், Tamil Nadu, India
41.    Southside FM Radio, South Africa
42.    Students Federation For Free Eelam, Tamil Nadu, India
43.    Students Movement For Change, Tamil Nadu, India
44.    Students Struggle for Tamil Eelam – தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு, Tamil Nadu, India
45.    Swedish Tamils Forum, Sweden
46.    Tamil Nadu Makkal Katchi – தமிழ்நாடு மக்கள் கட்சி, Tamil Nadu, India
47.    Tamil Nadu Students Movement – தமிழ்நாடு மாணவர் இயக்கம்,  Tamil Nadu, India
48.    Tamil Renaissance Front, Malaysia
49.    Tamil Agam Students Movement,  Tamil Nadu, India
50.    Tamils Against Genocide UK, USA
51.    Tamils Cultural Center – தமிழர் பண்பாட்டு நடுவம்,  Tamil Nadu, India
52.    Tamils For Labour, UK
53.    Tamil Students Initiative, UK
54.    Tamil Youth and Students Federation, Tamil Nadu, India
55.    Thamizh Thesiya Periyakkam – தமிழ்த் தேசியப் பேரியக்கம், Tamil Nadu, India
56.    Thamizh Thesiya Viduthai Iyakkam – தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்,  Tamil Nadu, India
57.    Thamizhar Munnetrak Kazhagam – தமிழர் முன்னேற்றக் கழகம்,  Tamil Nadu, India
58.    The solidarity Group for Peace and Justice in Sri Lanka, South Africa
59.    Thiravidar Viduthalai Kazhagam – திராவிடர் விடுதலைக் கழகம்,  Tamil Nadu, India
60.    Secretariat, Transnational Government of Tamil Eelam
61.    United States Tamil Political Action Council, USA
62.    World Thamil Organization, USA
63.    Young Tamil Nadu Movement – இளந்தமிழகம் இயக்கம், Tamil Nadu, India
————————— ### —————————–